விருதுநகரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையம் அமைக்கும் பணி
விருதுநகரில் வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு மையம், வாக்கு எண்ணிக்கை மையம் ஆகியவைகள் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
விருதுநகரில் வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு மையம், வாக்கு எண்ணிக்கை மையம் ஆகியவைகள் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தல் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் 6 நாள்களே உள்ளதால் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. விருதுநகரில் இரு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதில், செந்திக்குமார நாடார் கல்லூரியில் சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும், வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், விருதுநகர் சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.
அதற்கு முன்னதாக வாக்கு பதிவு முடிந்ததும், இயந்திரங்களை வாகனங்களில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். இதற்காக குறிப்பிட்ட இம்மையங்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையம் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையமும் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, மே-16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
தேர்தலில் பயன்படுத்த 73 வகை பொருள்கள்: மக்களவை தேர்தலில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலர்கள், மண்டல வாக்குச் சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வாக்குப் பதிவு இயந்திரத்தில் பெயர் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக தேர்தலில் பயன்படுத்துவதற்கான 73 வகையான பொருள்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மக்களவை தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர்.
அதனால் 2 பேலட் யூனிட்கள், வாக்கு பதிவு செய்கிறவருக்கு சீட்டு வழங்கும் 17ஏ நோட்டு, சோதனை வாக்கு பதிவு செய்ய பேலட் பேப்பர், வாக்காளர் பட்டியல் 3, மை குப்பி, பச்சை பேப்பர் சீல், 25 கவர்கள், வாக்குச் சாவடி மையங்களில் பணி செய்கிறவர்களின் பெயர் குறிப்பிட்ட தகவல் பட்டியல் உள்ளிட்ட 73 வகையான பொருள்கள் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.