முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்தியில் ஆட்சிமாற்றும் ஏற்படுவது உறுதி: முதல்வர் ரங்கசாமி

புதுவை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஏம்பலத்தில் அவர் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:03 AM
பகிர்:

மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதியாகி விட்டது என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுவை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஏம்பலத்தில் அவர் திங்கள்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

முதியோர் ஓய்வூதியம் வழங்காமல் மாநில அரசு அலைக்கழித்து வருவதாக காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கூறியுள்ளார். முதியோர், பெண்கள் நலனைக் காப்பதில் மாநில அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

முதியோர் ஓய்வூதியத்தை வங்கிகள் மூலம் வழங்க வேண்டும் என மத்திய அரசு தான் வற்புறுத்தியது. இதனால் தான் இம்முறையை பின்பற்றினோம். வங்கிகள் மூலம் ஓய்வூதியம் வழங்கும் முறையை மாநில அரசு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதியாகி விட்டது. நரேந்திரமோடி பிரதமர் ஆவார்.மத்திய அமைச்சர் நாராயணசாமி மீண்டும் வென்றால் எதுவும் செய்ய முடியாது. நான் பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக நாராயணசாமி கூறியுள்ளார்.

நான் பொய்ப் பிரசாரம் செய்யவில்லை. உண்மையைத் தான் கூறி வருகிறேன். மத்தியகாங்கிரஸ் அரசும், நாராயணசாமியும் செய்ததைத்தான் கூறி வருகிறேன். அதே போல் நான்செய்து வருவதையும் எடுத்துக் கூறுகிறேன்.

மத்திய அரசால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சி மாறினால் விரைவில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். புதிய அரசு அமைந்தவுடன் மாநிலத்துக்கு தேவையான நிதியைப் பெற்று நலத்திட்டங்களை செய்து முடிப்போம் என்றார் ரங்கசாமி.

சுற்றுலா அமைச்சர் பெ.ராஜவேலு, வேட்பாளர் ராதாகிருஷ்ணன், நீர் ஆதார கூட்டமைப்பு தலைவர் அங்குதாஸ் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.