சிதம்பரத்தில் ரூ.25 லட்சம் பணம் கேட்டு +1 மாணவர் கடத்தல்
சிதம்பரம் கோவிந்தசாமிதெருவைச் சேர்ந்த கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மகன் சூரியபிரகாஷ் (16) சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 11-
சிதம்பரத்தில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவரை ரூ.25 லட்சம் பணம் கேட்டு மர்ம நபர்கள் கடத்தியதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் கோவிந்தசாமிதெருவைச் சேர்ந்த கந்தசாமி. அண்ணாமலைப் பல்கலையில் செக்யூரிட்டியாக பணியாற்றும் இவரது மகன் சூரியபிரகாஷ் (16) சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை மாலை சூரியபிரகாஷ் சைக்கிளில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வீட்டு முன்பு சைக்கிளை நிறுத்தியுள்ளார். அதன் பின்னர் அம்மாணவரை காணவில்லை. மாணவரை தேடி பார்த்த அவரது பெற்றோர், செல்போனில் சூரியபிரகாஷை தொடர்பு கொண்டனர். அப்போது வேறு நபர் செல்போனை எடு்த்து ரூ.25 லட்சம் பணம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் எனக்கூறி துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கந்தசாமி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் சூரியபிரகாஷின் செல்போன் டவர் கடலூர் தேவனாம்பட்டினத்தை காட்டுவதால், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.