முகப்பு
தற்போதைய செய்திகள்

சீரழிவு சக்திகளை வீழ்த்தி நல்லாட்சி அமைய மக்கள்  துணை நிற்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் நெருங்கிவிட்டது. மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் நெருங்கிவிட்டது. மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை இழைத்த காங்கிரஸ்கட்சியை வீழ்த்துவது மட்டுமின்றி, தமிழகத்தை கடந்த 47 ஆண்டுகளாக சீரழித்து வரும் அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவதற்கும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் தேர்தல் மிகப்பெரியவாய்ப்பு ஆகும்.

கடந்த 47 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின்ஆட்சிகளில் தமிழகம் பெற்றதையும், இழந்ததையும் சிந்தித்துப் பார்த்துவாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் நேற்று பிரச்சாரத்தை நிறைவு செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாநிர்வாகத் திறனில் சிறந்தவர் மோடியா... அல்லது இந்த லேடியா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மூன்றே மாதங்களில் மின்வெட்டைப் போக்கி தமிழகத்தை ஒளிமயமான மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 3 ஆண்டுகளாக தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கி தொழில் வளர்ர்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் சீரழித்தது, வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றை வைத்துப்பார்க்கும் போது சீரழிக்கும் திறனில் சிறந்தவர் இந்த லேடி தான் என்பது தெளிவாகிறது.

 திட்டமிட்டு செயல்பட்டால் 3 ஆண்டுகளில் மின்வெட்டை போக்கிவிட முடியும் என்ற நிலையில் முந்தைய 5 ஆண்டு ஆட்சியில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியது தி.மு.க.வின் சாதனை. அதையே காரணம் காட்சி ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டை போக்குவதற்கு பதில் மின்வெட்டை அதிகரித்தது தான் அ.தி.மு.க. அரசின் சாதனை.

வீராணம் ஊழலில் தொடங்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் வரைமுறைகேடு செளிணிவதை மட்டுமே முழுநேரத் தொழிலாக கொண்டது தி.மு.க.இவ்வாறு தமிழகத்தில் வளத்தை ஏற்படுத்தப் போவதாக கூறி மாறிமாறி ஆட்சிக்கு வந்த இந்தக் கட்சிகள் தங்களை வளமாக்கிக் கொண்டனவே தவிர தமிழக மக்களை வளமாக்க வில்லை; அவர்கள் இன்னும் வறுமையில் தான் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த தீமைகளுக்கு முடிவு கட்டி, தமிழகத்தை இந்த கட்சிகளின் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்காகத் தான் பாரதியஜனதா தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைய வேண்டும்.

அத்தகைய அரசு அமைந்தால் தமிழகத்தின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும், மின்வெட்டு என்பதே இல்லை என்ற நிலை ஏற்படும், தமிழகத்தில் மது என்ற அரக்கன் ஒழிக்கப்பட்டு மக்கள்,குறிப்பாக பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழும் நிலை உருவாகும்,  நதிநீர் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விவசாயம் செழிக்கும், ஈழத்தமிழர்களை கொன்று குவித்தவர்கள் கூண்டிலேற்றி தண்டிக்கப்படுவார்கள் கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் நிலை ஏற்படுத்தப்படும் என்று அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →