முகப்பு
தற்போதைய செய்திகள்

தவ்ஹீக் ஜமாத் நிர்வாகிகளை கண்டித்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ. திடீர் மறியல், பரபரப்பு

மேலப்பாளையத்தில் திமுக, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பிரசாரம் செய்யவிடாமல் இடையூறு செய்ததாக புகார் தெரிவித்து செவ்வாய்க்கிழமை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் மறியலில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

மேலப்பாளையத்தில் திமுக, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் பிரசாரம் செய்யவிடாமல் இடையூறு செய்ததாக புகார் தெரிவித்து செவ்வாய்க்கிழமை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் இறுதிகட்டப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுவதால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. திமுக வேட்பாளர் தேவதாசசுந்தரம் திறந்த ஜீப்பில் வாக்குசேகரித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு, தேமுதிக வேட்பாளர் சிவனணைந்தபெருமாளை ஆதரித்து கட்சியினர் பொருளாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் மை.பா. ஜேசுராஜ், இந்திய மக்கள் கழகத் தலைவர் தி. தேவநாதன்யாதவ் ஆகியோரும் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
வாகனப் பேரணி: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகம்மது முபராக்கை பேரணியாக சென்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலப்பாளையத்தில் தைக்கால் தெரு, கொட்டிகுளம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனராம்.

அப்போது அங்கு திமுக, தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்
பிரசாரம் செய்யவிடாமல் இடையூறு ஏற்படும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகியை தவ்ஹீக் ஜமாத் அமைப்பினர் தாக்கினாராம்.

‘இது குறித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத போலீஸைக் கண்டித்தும், திமுக, தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு்க்க வேண்டும். வேட்பாளர் வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக்கிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மேலப்பாளையத்தில் சந்தை சந்திப்பில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநகர காவல் உதவி ஆணையர் மாதவன், காவல் ஆய்வாளர் க. ஜெயமுருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். அப்போது அங்கு வந்த தேர்தல் பொதுப் பார்வையாளர் மனோஜ்குமார் போராட்டம் குறித்து காவல்துறையினரிடம் விசாரித்தார்.

தேவநாதன்யாதவ் பிரசாரம்: இதனிடையே மறியல் நடைபெற்ற சந்தை சந்திப்பில் இந்திய மக்கள் கழக நிறுவனர் தலைவரும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தி. தேவநாதன்யாதவ் திறந்த ஜீப்பில் வாக்குசேகரித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →