முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டு்ள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டு்ள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம், நான்குனேரி ஆகிய 6 பேரவைத் தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் உள்ளன. இத்தொகுதியில் 1617 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளும் தென்காசி மக்களவைத் தொகுதியில் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 1090 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2707 வாக்குச்சாவடிகளில் 401 மையங்களில் 604 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுவதால் முழு அளவில் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த வாக்குச்சாவடிக்கு தேர்தல் நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பிற உபரகணங்கள் புதன்கிழமை அந்தந்த மையங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 11 லட்சத்து 79 ஆயிரத்து 960, பெண்கள் 11 லட்சத்து 89 ஆயிரத்து 565, மற்றவர்கள் 24. தேர்தல் பணியில் 13,251 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை 138 மண்டலங்களாகவும், தென்காசி மக்களவைத் தொகுதியை 144 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலங்களுக்கு ஒரு மண்டல அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 401 நுண் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியும் வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு்ள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →