நெல்லை: பூத் சிலிப் கிடைக்காமல் வாக்காளர்கள் ஏமாற்றம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி ஏப். 14 ஆம் தேதி தொடங்கிய போதிலும் வாக்காளர்களுக்கு புதன்கிழமை பிற்பகல் வரை முழுமையாக வழங்கப்படவில்லை என
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி ஏப். 14 ஆம் தேதி தொடங்கிய போதிலும் வாக்காளர்களுக்கு புதன்கிழமை பிற்பகல் வரை முழுமையாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதிகளில் 23 லட்சத்து 69 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர். மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி கடந்த ஏப். 14 ஆம் தேதி தொடங்கியது. வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் ஏப். 20 ஆம் தேதி வரை பூத் சிலிப் வழங்குவார்கள் என தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மு. கருணாகரன் தெரிவித்தார்.
எனினும் வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இம்மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் புதன்கிழமை (ஏப். 23 ஆம் தேதி) வரை வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.பூத் சிலிப் வழங்கும் பணியில் 2707 வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு்ள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பூத் சிலிப் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அதையும் தவற விட்ட வாக்காளர்கள் வியாழக்கிழமை வாக்குப்பதிவு மையங்களில் காலை 6 மணி முதல் வாக்காளர்கள் பூத் சிலிப் பெற்றுக் கொள்ளளலாம் என அறிவிக்கப்பட்டு்ள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. வியாழக்கிழமை வாக்குச்சாவடிகளில் பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு தொடங்கிய பிறகு பூத் சிலிப் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.