அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்
பழனி அருகே பாலசமுத்திரம் கலையரங்கம் அருகே வியாழக்கிழமை தேர்தல் முடிந்த நிலையில் கிழக்குத்தெருவை சேர்ந்த முகமது கனி மனைவி மும்தாஜ் பேகம் அதிமுக உறுப்பினர்களுடன் பேசிக்
பழனி அருகே அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல் நடைபெற்றது.
பழனி அருகே பாலசமுத்திரம் கலையரங்கம் அருகே வியாழக்கிழமை தேர்தல் முடிந்த நிலையில் கிழக்குத்தெருவை சேர்ந்த முகமது கனி மனைவி மும்தாஜ் பேகம் அதிமுக உறுப்பினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இவர் அதிமுக மகளிரணி ஒன்றிய செயலாளர் ஆவார். அப்போது முன்விரோதம் காரணமாக அவ்வழியே வந்த ராஜா என்ற ராஜாமுகமது மற்றும் அவரது சகோதரர்கள் அப்துல்சலாம், அன்வர்தீன் ஆகியோர் மும்தாஜை ஆபாசமாக பேசியதோடு தலைமுடியை பிடித்து இழுத்து குச்சியால் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஜவஹர் என்பவரையும் தாக்கியுள்ளனர். மேலும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதில் ஊமைக்காயம் அடைந்த மும்தாஜ் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மும்தாஜ் கொடுத்த புகாரின் பேரில் பழனி தாலுகா போலீஸார் சகோதரர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.