முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் கிடந்த ரூ.1.20 கோடி தங்கம் யாருடையது: சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் கிடந்த 4 கிலோ கடத்தல் தங்கம் யாருடையது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் கிடந்த 4 கிலோ கடத்தல் தங்கம் யாருடையது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை மொத்தம் 6 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. அதில் 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவர்கள் குறிóத்த விவரம் தெரியவந்தது. இதனையடுத்து தொடர்புடைய பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து கடத்தி வந்த 4 கிலோ தங்கம் யாருடையது என்பதில் மர்மம் நீடித்துள்ளது. குளிர்சாதனப்பெட்டியின் உறையின் மேல் கிஷோர்கான், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம் என எழுதப்பட்டிருந்தது. அதனைவைத்து அந்த பயணி சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர்-இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்தவர் என கண்டறியப்பட்டு அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் சென்றனர். ஆனால் குறிப்பிட்ட பெயர் மற்றும் முகவரியில் யாரும் இல்லை என தெரியவந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே தங்கம் கடத்தி வந்தவர் யார் என்பதில் மர்மம் நீடிக்கின்றது.

குளிர் சாதனப்பெட்டியை கொண்டு வந்தவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட அந்த முகவரியில் தங்கியிருந்து பாஸ்போர்ட் எடுத்த நபராகவும், தற்போது வேறு முகவரியில் வசித்து வருபராகவும்  இருக்கலாம். இல்லையேல் போலி பெயர் மற்றும் முகவரியில் பாஸ்போர்ட் எடுத்து பயணித்த நபர் தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விமான நிலைய கழிவறையில் 2-க்கும் மேற்பட்ட தடவை கடத்தல் தங்கத்தை பயணிகள் சிலாó விட்டுச்சென்றனர். அதுபோல தற்போது 4 கிலோ தஙகத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். தற்போது விட்டுச்சென்ற கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.1.20 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.