வீராணம் ஏரியிலிருந்து, குடிநீருக்கு தண்ணீர் திறக்க கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து குடிநீருக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பொதுப்பணித்துறை
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து குடிநீருக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
கடித விபரம்: கோடையின் கடுமையால் சிதம்பரம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள், குளங்கள் அனைத்து காய்ந்து வெடித்துக் கிடக்கின்றன. இதனால் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் குடிநீரின்றி அவதியுறுகின்றனர். நிலத்தடி நீரும் வற்றி ஆழ்குழாய் கிணறுகள் இயங்கவில்லை. அடுத்த சில நாட்களில் நிலைமை மிகவும் மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீரின்றி அவதியுற்று வரும் பொதுமக்களையும், கால்நடைகளையும் காப்பாற்றிட வீராணம் ஏரியிலிருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.