தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மோதல் சம்பவம் தொடர்பாக 34 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்   வீடு மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில்   வீடு மற்றும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ளது புல்லலக்கோட்டை கிராமம். இங்கு ஒரு தரப்பைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் இறந்துவிட்டார். இந்த துக்க நிகழ்ச்சிக்காக மேளதாளம் மற்றும் ஒலிப்பெருக்கி அமைத்து பாட்டுக்கேற்க இறந்தவரின் உறவினர் மருது ஆடினாராம். அவருடன் மற்றொரு தரப்பைச் சேர்ந்த நண்பர் வேல்முருகனும் ஆடியதாக கூறப்படுகிறது. இதற்கு மருதுவின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளனர். இதையடுத்து இறுதி ஊர்வலம் சென்றனர். அப்போது, வேல்முருகன் கிராமத்தில் தகவலை தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் உருட்டு கட்டை மற்றும் கம்பு ஆகியவைகளுடன் ஒரு தரப்பினரின் தெருக்களில் புகுந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில், வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாயகிருஷ்ணன்(34), சேது(42), கிருஷ்ணன்(34), ராஜூ(50), பாண்டியராஜன்(42), ஆறுமுகம்(29), குப்புசாமி(45), அன்னலெட்சுமி(30), வள்ளி(25) உள்ளிட்ட 20 காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் பாண்டியன் நகர் போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களான வேல்முருகன், மாரீஸ்வரன், களக்காண்டி, பார்த்தசாரதி, சௌந்தரபாண்டியன், முனீஸ்வரன், முனியாண்டி உள்ளிட்ட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT