முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: மது விலக்கை வலியுறுத்தி ஒரு கோடி பேரை சந்திக்கும் பிரசாரம் தொடக்கம்

குவைத்ராஜா மக்கள் சமூக இயக்கம் அமைப்பின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைப்பின் தென்மணடல செயலர் சு.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு கோடி நபர்களை சந்திக்கும் விழிப்புணர்வு பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது.

குவைத்ராஜா மக்கள் சமூக இயக்கம் அமைப்பின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைப்பின் தென்மணடல செயலர் சு. சந்திரசேகர் தலைமை வகித்தார். கரூர் மாவட்டச் செயலர் மா. ராமசாமி, தேனி மாவட்டச் செயலர் ஐயாகண்ணு, விருதுநகர் மாவட்டச் செயலர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒரு கோடி நபர்களை சந்திக்கும் பிரசார இயக்கம் நடத்துவது, இந்த பிரசாரத்தில் மரம் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, புகையிலை தவிர்ப்பு, கண்தானம், ரத்ததானம், சாலை விதிகளை கடைபிடித்தல் போன்றவை குறித்து மக்களிடம் தெரிவிப்பது, மாவட்ட அளவில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அமைப்பின் மாநில செயலர் வெளியிட்டு ஒரு கோடி நபர்களை சந்திக்கும் பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

மாநில பேச்சாளர் ச. ஜோசப், மாவட்ட துணைச் செயலர் கனிமொழி, கன்னியாகுமரி மாவட்ட துணைச் செயலர் தைனஸ்அருட்செல்வி, மாவட்டச் செயலர்கள் உமாபாலசந்தர், திருமாறன், சுனிதாபேகம், மாவட்ட இளைஞரணி செயலர் ஆ. குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட துணைச் செயலர் தி. முகம்மதுயாக்கூப் வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலர் சுப்புத்தாய் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →