முகப்பு
தற்போதைய செய்திகள்

பாபநாசம் அணையில் படகு சவாரி நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறைந்ததை அடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. எனினும் அரு்விகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறைந்ததை அடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. எனினும் அரு்விகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலை நீர் ஆதாரத்தை கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இயற்கை எழிலுடன் பாபநாசம் பாணதீர்த்த அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் மிக சுற்றுலாத் தலங்களாக திகழ்கிறது.

பாபநாசம் அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அணையில் படகு சவாரி செய்து மகிழ்வர். மின்வாரிய நிர்வாகத்தின் கீழ் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

144 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் படகு சவாரி செல்வது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணை முழு கொள்ளளவை எட்டும்போது, அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறையும்போது அணையில் படகு சவாரி நிறுத்தப்படும்.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 35 அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 35 அடி இருந்தபோதிலும், அணையில் 25 அடி சேறு இருப்பதால் படகு சவாரி செய்ய இயலாது. ஆகவே சனிக்கிழமை முதல் அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →