முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயன்ற பெண்

பேட்டை உடையவர் தெருவை சேர்ந்த சண்முகவேல் மனைவி உலகம்மாள் (49). இவர் கட்டுக்குத்தகையாக பயிர் செய்து வரும் நிலத்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரமுகர் ஒருவர் கிரையம் வாங்கி

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:07 AM
பகிர்:

திருநெல்வேலியில் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு தற்கொலை செய்ய மண்ணெண்ணை கேனுடன் பெண் ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டை உடையவர் தெருவை சேர்ந்த சண்முகவேல் மனைவி உலகம்மாள் (49). இவர் கட்டுக்குத்தகையாக பயிர் செய்து வரும் நிலத்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பிரமுகர் ஒருவர் கிரையம் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் குத்தகை நிலத்தை ஒப்படைக்க உலகம்மாளுக்கு பணம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டதாம். எனினும் உறுதி அளித்தவாறு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து புகார் தெரிவிக்க திங்கள்கிழமை உலகம்மாள் கையில் மண்ணெண்ணை கேனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அறை வரை சென்ற உலகம்மாளை போலீஸார், மடக்கி அவரிடம் இருந்த மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்து, அனுப்பி வைத்தனர். உலகம்மாள் மண்ணெண்ணை கேனுடன் வந்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →