தற்போதைய செய்திகள்

விருதுநகர் மக்களவை தொகுதியில் தபால் வாக்குகளை அலுவலர்கள் வருகிற 16ம் தேதி வரையில் அளிக்க அனுமதி

விருதுநகர் மக்களவை தொகுதியில் 1500 அலுவலர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 16-ம் தேதி காலை 8 மணிக்குள் அஞ்சல் வாக்குகள்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் 1500 அலுவலர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 16-ம் தேதி காலை 8 மணிக்குள் அஞ்சல் வாக்குகள் பெறுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதனால், அன்றைய நாளில் வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், விருதுநகர் மக்களவை தொகுதியைச் சேர்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி சான்றிதழ் பெற்று, அவர்கள் பணிபுரியும் வாக்குச் சாவடி மையங்களிலேயே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலன அலுவலர்கள் அதை விரும்பாமல், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்றனர்.

இதேபோல், ராணுவத்திலும் பணியாற்றுகிறவர்களுக்கு அஞ்சல் ஓட்டு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் படிவம்-12 ஐ பூர்த்தி செய்து மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால், வாக்குச் சீட்டு அனுப்பி வைக்கப்படும். அதையடுத்து விரும்புகிறவர்களுக்கு வாக்களித்து, அஞ்சல் மூலம் மாவட்ட தேர்தல் பிரிவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல், வாக்குகள் அளிப்பதற்கு இம்மாவட்டத்தில் 1500 பேருக்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வரையில் 50 பேர்கள் மட்டுமே அஞ்சல் வாக்குகளை மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். இதில், வாக்களிக்காத அலுவலர்கள் உள்ளனர். இந்த அலுவலர்கள் வருகிற 16-ம் தேதி காலை 8 மணிக்குள் அஞ்சல் வாக்குகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

SCROLL FOR NEXT