தூத்துக்குடி அருகே பெயிண்டர் அடித்துக் கொலை: போலீஸார் விசாரணை
தூத்துக்குடியில் பெயிண்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் மகன் பாலமுருகன் (28). இவரது மனைவி
தூத்துக்குடியில் பெயிண்டர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார். தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் மகன் பாலமுருகன் (28). இவரது மனைவி குழந்தைகள் தென்காசி அருகே உள்ள புளியரைக்கு அவர்கள் வீட்டுகுச் சென்று வெகுநாட்கள் ஆனதாம்.
இந்நிலையில், தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி என்ற ஊரில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பாலமுருகன் பிணமாகக் கிடந்தார். தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸார், டிஎஸ்பி சக்ரவர்த்தி தலைமையில் விசாரணை மேற்கொண்டு, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.