முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பழுது நீக்க நிறுத்தப்பட்டிருந்த லாரி திருட்டு

விருதுநகரில் எலெக்ட்ரிக் பழுது நீக்கம் செய்வதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அதன் உரிமையாளர் போலீஸாரிடம் புகார் செய்தார்.

Updated On : 30 ஏப்ரல், 2014 at 3:22 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:38 AM

விருதுநகரில் எலெக்ட்ரிக் பழுது நீக்கம் செய்வதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அதன் உரிமையாளர் போலீஸாரிடம் புகார் செய்தார்.

விருதுநகர் அருகே சிவகாசி சுப்பிரமணியாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஜேசுராஜா(30). இவர் லாரியில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி எலெக்ட்ரிகல் பழுது நீக்கம் செய்வதற்காக விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் நிறுத்திவிட்டுச் சென்றார். அதையடுத்து, பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒர்க்ஷாப் தொழிலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து புதன்கிழமை அதிகாலையில் லாரியை எடுப்பதற்காக ஜேசுராஜா வந்தாராம். அப்போது, ஒர்க்்ஷாப் முன்பு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த லாரியின் மதிப்பு ரூ.2.80 லட்சம் ஆகும்.

Advertisement

இது தொடர்பாக ஜேசுராஜா விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன லாரி மற்றும் அதை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.