முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளியின் வீட்டை திறந்து நகை, ரொக்கம் திருட்டு

விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளியின் வீட்டை திறந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:32 AM

விருதுநகர் அருகே பட்டாசு தொழிலாளியின் வீட்டை திறந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

    விருதுநகர் அருகே அரசகுடும்பன்பட்டியைச் சேர்ந்த கடற்கரை என்பவரின் மகன் கோவிந்தராஜ்(38). இவர் வியாழக்கிழமை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு, பின் வீட்டை பூட்டி சாவியை மின்மீட்டர் பெட்டி மீது வைத்து விட்டு கணவனும், மனைவியும் அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்றனர். அதையடுத்து, வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது, வீடு திறந்து கிடந்ததை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ளே சென்று பார்க்கையில் பீரோவையும் உடைத்து 1 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4500-ம்  மர்ம நபர்கள் திருடிச்
சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வீட்டை திறந்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.