முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை அருகே மாஞ்சோலையில் மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை அமையப் பெற்றுள்ளது. புலிகள் காப்பகத்தில் களக்காடு அருகே

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:03 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை, நாலுமுக்கு பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை அமையப் பெற்றுள்ளது. புலிகள் காப்பகத்தில் களக்காடு அருகே புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிருப்பு, விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு, பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு, ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம், பூவன்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல், மலையான்குளம் உள்ளிட்ட மலையடிவாரக் கிராமங்களில் சிறுத்தைப்புலி, காட்டு பன்றி போன்ற விலங்கினங்கள் அட்டகாசம் செய்து விளைப் பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன.

சிறுத்தைப்புலி ஆடு, நாய் போன்ற விலங்கினங்களை அடித்து கொன்று வருவதாக மலையடிவாரக் கிராம மக்கள் தெரிவித்தனர். வனத்துறை மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்து வருகின்றனர். மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவர், உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு மாஞ்சோலை அருகே நாலுமுக்கு பேருந்து நிறுத்தத்தில் சிறுத்தைப்புலி நடமாடுவதை பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் இரவில் பேருந்தில் பயணம் செய்வோர் வீட்டுக்கு அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. வீடுகளில் இருந்து அவசரத் தேவைக்கு வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →