சம்பள பாக்கியைக் கேட்டு நெல்லையில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
பாளையங்கோட்டையில் புதிய பேருந்து நிலைய துப்புரவு பணியாளர்கள் 3 மாதங்களாக சம்பள வழங்காததை கண்டித்து செவ்வாய்க்கிழமை திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டையில் புதிய பேருந்து நிலைய துப்புரவு பணியாளர்கள் 3 மாதங்களாக சம்பள வழங்காததை கண்டித்து செவ்வாய்க்கிழமை திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியில் ஈடுபடுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்துள்ளது. இந்த பணியில் 21 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதனிடையே துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையாம். இதை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர். நிலுவை இன்றி சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தினால் பேருந்து நிலைய வளாகத்தில் குப்பைகள் தேங்கி சுகாதாரமின்றி காணப்படுகிறது.