முகப்பு
தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் : தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ் சம்பத் மதுரையில் பேட்டி

தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ் சம்பத் இன்று சென்னையில் இருந்து மதுரை சென்றார். தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த சம்பத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் விமான நிலையத்தில் வரவேற்றார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:06 AM
பகிர்:

தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ் சம்பத் இன்று சென்னையில் இருந்து மதுரை சென்றார். தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த  சம்பத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் விமான நிலையத்தில் வரவேற்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சம்பத்திடம், உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என செய்தியாளர்கள்  கேட்ட போது இன்னும் 2, 3 நாட்களுக்குள் மீண்டும் அறிவிப்பு வரும் என்றார்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாக எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால் இதுவரை எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்.

தேர்தலின் பொது தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பற்றி கேட்டதற்கு, மாநிலத்தின் நிலை பற்றி அறிந்து தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு அது, தில்லியில் கூட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.

தேர்தல் செலவு கணக்கு பற்றி கேட்ட போது அது பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.