முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி்க்கையை வலியுறுத்தி அரசு, தனியார் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:08 AM
பகிர்:

கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரி்க்கையை வலியுறுத்தி அரசு, தனியார் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழ் கல்வி ஆண்டில் ஆங்கில வழி கல்வி மற்றும் சுயநிதி பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்காததை கண்டித்து மாணவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

திங்கள்கிழமை சுரண்டை காமராஜர் கலைக் கல்லூரி மாணவர், மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில் மாணவர்களிடம் இருந்து நிதி திரட்டுவதாக புகார் தெரிவித்த மாணவர்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

முற்றுகை: தென்காசி கொடிக்குறிச்சி, வாசுதேவநல்லூர், வடக்கன்குளம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். இக்கல்லூரிகளில் பயிலும் தலித் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →