முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி அருகே ரயில் முன் பாய்ந்து ஐ.டி.ஐ. மாணவர் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் ரயில் முன் பாய்ந்து ஐ.டி.ஐ. மாணவர் திங்கள்கிழமை தற்கொலை செய்தார்.

Updated On : 18 ஆகஸ்ட், 2014 at 8:45 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் ரயில் முன் பாய்ந்து ஐ.டி.ஐ. மாணவர் திங்கள்கிழமை தற்கொலை செய்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் தண்டவாளத்தில் சிறுவனின் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் திருநெல்வேலி நகரம் தர்மராஜா கீழத்தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன் சுடலை (16) என்பது தெரியவந்தது. பேட்டை ஐ.டி.ஐ.யில் படித்து வந்த இவர், கடந்த ஒரு வாரமாக கல்வி கற்க செல்லவில்லையாம். இதை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் தாழைத்துக்குச்சென்ற அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் பார்வதி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.