முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் கூட்டம்: புறக்கணித்தது கேரளா
முல்லைப்பெரியாறு அணை மூவர் ஆய்வு குழுவின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கேரள பிரதிநிதி கேரள தலைமை செயலாளர் குரியன் புறக்கணித்தார்.
முல்லைப்பெரியாறு அணை மூவர் ஆய்வு குழுவின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கேரள பிரதிநிதி கேரள தலைமை செயலாளர் குரியன் புறக்கணித்தார்.
குமுளியில் கூட்டம் நடந்தால் மட்டுமே, கேரள அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் கூட்டத்தை புறக்கணித்தார். இந்நிலையில் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் கூட்டம் நடந்தது. தமிழக அரசுப் பிரதிநிதியான தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் கலந்து கொண்டார். கூட்டம் மதிய இடைவேளைக்குப் பின் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.