முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் செங்கல் சூளையிலிருந்து 6 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 செங்கல் சூளைகளை ஆய்வு செய்த குழுவினர் அங்கு பணியில் இருந்த 6 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:33 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் 12 செங்கல் சூளைகளை ஆய்வு செய்த குழுவினர் அங்கு பணியில் இருந்த 6 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

தொழிலாளர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உ்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூர், வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் ஆகியோரால் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து 12 செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது 6 குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இக் குழந்தைகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணையில் அவர்களுக்கு வயது 14-க்கு மேற்பட்டு இருப்பதும் பள்ளியிலிருந்து இருந்து இடைநின்ற குழந்தைகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மற்றும் சைல்டு லைன் அமைப்பின் உதவியுடன் 6 குழந்தைகளும் மீள பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் ரூ.20 ஆயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று செங்கல் சூளை உரிமையாளர்களிடம் அலுவலர்கள் எச்சரித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →