முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலர்களின் அலட்சியப் போக்கு: பொதுமக்கள் சாலைமறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:34 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியின் 18 மற்றும் 19-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த மடத்துப்பட்டி, கீழப்பட்டி பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து நகராட்சி ஆணையாளர், குடிநீர் விநியோக மேற்பார்வையாளர் உள்ளிட்டோரிடம் பல முறை பொதுமக்கள் சார்பில் நேரில் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், குடிநீர் விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமுற்ற அப் பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் நான்கு பக்க சாலையையும் மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, திங்கள்கிழமை நகராட்சி ஆணையாளர் பழனிவேலுடன் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு கண்டுகொள்ள ஆலோசனை வழங்கி பொதுமக்களை கலைந்து செல்லச் செய்தார். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →