போதையில் பணிபுரிந்த காவலர் பணியிடை நீக்கம்
காவலர்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா செவ்வாய்க்கிழமை
காவலர்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா செவ்வாய்க்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மேகநாதன் (40). பெரம்பலூர் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, செவ்வாய்க்கிழமை காலை குடிபோதையில் சென்ற மேகநாதன், அங்கிருந்த காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் அலுவலக காவலர்கள், அளித்த தகவலை தொடர்ந்து, பணியின்போது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மேகநாதனை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா.