ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவிலில் 1 கிலோ எடையுள்ள வெள்ளிக் கிரீடம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோவிலை உடைத்து அதிலிருந்த 1 கிலோ எடையுள்ள வெள்ளி கிரீடம், உண்டியல் பணம் ரூ.3 ஆயிரம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாய் வியாழக்கிழமை காவல் நிலையத்தில்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவிலில் 1 கிலோ எடையுள்ள வெள்ளிக் கிரீடம் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோவிலை உடைத்து அதிலிருந்த 1 கிலோ எடையுள்ள வெள்ளி கிரீடம், உண்டியல் பணம் ரூ.3 ஆயிரம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாய் வியாழக்கிழமை காவல் நிலையத்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோவிலை உடைத்து அதிலிருந்த 1 கிலோ எடையுள்ள வெள்ளி கிரீடம், உண்டியல் பணம் ரூ.3 ஆயிரம் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாய் வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மல்லி அருகேயுள்ள அப்பையநாயக்கன்பட்டியில் யாதவர் குல வகையறாக்களுக்குப் பாத்தியப்பட்ட வீரனசாமி கோவில் உள்ளது. இக் கோவிலின் சுற்றுச் சுவர் ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள், வெளிப்புற கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அடுத்துள்ள தகரக் கதவின் பூட்டையும் உடைத்து உள்ளே கோவிலினுள் சென்றுள்ளனர். அங்கிருந்த தகரப் பெட்டியின் பூட்டை உடைத்து அதிலிருந்த 1 கிலோ எடையுள்ள வெள்ளிக் கிரீடம் மற்றும் சுவாமியின் முன்பு இருந்த சில்வர் குட உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம் சுமார் ரூ.3 ஆயிரத்தைத் திருடிச் சென்று விட்டார்களாம்.
சம்பவம் 22-ம் தேதி காலை 11 மணியிலிருந்து 26-ம் தேதி காலை 9.15 மணிக்குள் நடைபெற்றுள்ளதாயும், புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து வியாழக்கிழமை மல்லி காவல் நிலையத்தில் கோயில் பூசாரி பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த ரா.மணிவாசகன் (44) புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.