முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேர்த்திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரம் உள்ள புகழ்மிக்க குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:37 AM
பகிர்:

திருநெல்வேலி குறுக்குத்துறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரம் உள்ள புகழ்மிக்க குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணித் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்பு கோயில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு சப்பரங்கள், வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலையில் அருள்மிகு ஆறுமுகர் உருகுசட்டம் நடைபெறுகிறது. அதன்பின்பு சண்முகவிலாசம் கட்டளை, தண்டியல்பல்லக்கு சேவை, வெற்றிவேர் சப்பரத்தில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளலும், சிறப்பு நீராட்டு வழிபாடும் நடைபெறுகின்றன. அன்று இரவு தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருநெல்வேலி மாநகருக்கு சுப்பிரமணியர் எழுந்தருள்கிறார்.செப்டம்பர் 5 ஆம் தேதி காலையில் வெள்ளைசாத்தி நான்முகன் காட்சியும், இரவில் பச்சை சாத்தி திருமால் காட்சியும், ஆறுமுகர் சேர்க்கையும் நடைபெறுகின்றன. 6 ஆம் தேதி காலையில் தண்டியல் பல்லக்கில் சுவாமி அருள்பாலிப்பார்.

விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 7 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அன்று பகலில் சிறப்பு அபிஷேகமும், ஏழு வண்ணப் பல்லக்கில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.

8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெறுகின்றன. 9 ஆம் தேதி காலையில் சுவாமி தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். மாலையில் அலங்கார விளக்குகள் அலங்காரத்துடன் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நாள்களில் தினமும் பக்திச் சொற்பொழிவும், திருமுறை விண்ணப்பமும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →