முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளை. யில் கொட்டும் மழையில் மண்பாண்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மழைக்காலங்களில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட முடியாத நிலை இருப்பதால் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவியாக குடும்பத்திற்கு ரூ. 4 ஆயிரம் வீதம் வழங்கப்படும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

பாளையங்கோட்டையில்  இன்று கொட்டும் மழையில் அறிவிக்கப்பட்ட மழைக்கால நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மண்பாண்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைக்காலங்களில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட முடியாத நிலை இருப்பதால் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவியாக குடும்பத்திற்கு ரூ. 4 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அரசு அறிவித்த உதவித் தொகை வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் பழுதடைந்த மண்பாண்டத் தொழில் கூடங்களை அரசு செல்வில் புதுப்பிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தில் மண்பாண்டங்கள் செய்யும் வகையில் அரசு பயிற்சி மையங்கள் அமைத்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

குலாலர் சமுதாய மக்களுக்கு தொழில் செய்ய இலவசமாக மண் வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் குலாலர் சமுதாயத்தினருக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மண்பாண்டத் தொழிலாளர் குலாலர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜவாஹர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர். முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலர் பாலாமடை எம். ஐயப்பன், தொழிற்சங்கத் தலைவர் ஏ. மந்திரமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் எஸ். சங்கரநாராயணன், மாநகர பொருளாளர் எஸ். பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைப்பின் மாநில பொதுச்செயலர் மகேஷ்கண்ணன், மாநில இளைஞரணி செயலர் எஸ்.என். பழனி மற்றும் செங்கோட்டை, இலஞ்சி, தேன்பொத்தை, களக்காடு, புதுக்குடி, வீரவநல்லூர், கூனியூர், காருக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, பாலாமடை, வாவாநகரம், நாராயணம்மாள்புரம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெண்கள் உள்பட 1,000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை தொடர்ந்து பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →