முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி அருகே பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்ததில் ஒரு மாணவி பலி: ஒருவர் படுகாயம்

திருநெல்வேலி அருகே உள்ள  உக்கரன் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பள்ளிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் சரண்யா, மற்றும் சுமதி  இன்று காலை பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:34 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே உள்ள  உக்கரன் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பள்ளிக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்த மாணவிகள் சரண்யா, மற்றும் சுமதி  இன்று காலை பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்தனர்.

இதில் சுமதி என்பவர் தலையில் பேருந்து ஏறியதால் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் அதிமுக கவுன்சிலர் மகளாவார். மேலும் சரண்யா என்பவருக்கு கால் முறிந்தது. அவரை  திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவரும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள். இந்த விபத்து குறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.