லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
திருச்சி மாவட்டம், லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் புதன்கிழமை வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் புதன்கிழமை வந்துள்ளது. இதனால், அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லால்குடி ரயில் நிலைய மேலாளருக்கு ரூ. 5 கவரில் ஒரு கடிதம் புதன்கிழமை வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு மூலம் டிச. 5-ம் தேதி ஒரு விரைவு ரயில் தகர்க்கப்படும் என எழுதப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு ஓர் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த நிலையில், தற்போது லால்குடி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.