பழனிக்கோயில் உண்டியல் எண்ணிக்கைக்கு நவீன தராசுகள்
தமிழ்நாட்டின் முதன்மைக் கோயிலாக விளங்குவது பழனி அருள்மிகு தண்டாயுதபாமி சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தற்போது சராசரியாக 25 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் நிலை உள்ளது. இந்த
பழனிக்கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது சில்லறைகள் எண்ணுவதற்காக நவீன தராசுகள் வாங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதன்மைக் கோயிலாக விளங்குவது பழனி அருள்மிகு தண்டாயுதபாமி சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் வருடம் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தற்போது சராசரியாக 25 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் நிலை உள்ளது. இந்த உண்டியல் எண்ணிக்கையின் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், வங்கி ஊழியர்கள் என சுமார் ஐநூறு பேர் ஈடுபடுவது வழக்கம். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லறைகள் சல்லடைகள் மூலம் 25பைசா, ஐம்பது பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என பிரிக்கப்படுகிறது. காணிக்கையில் வரும் சில்லறைகளே பல இலட்சம் ரூபாயைத் தாண்டும். இந்த சில்லறைகள் தராசுகளில் எடை போடப்பட்டு இரண்டாயிரம், ஐந்தாயிரம், நான்காயிரம் என பிரித்து சாக்குப்பையால் கட்டப்பட்டு வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது.
காலப்போக்கில் சில்லறைகளின் வடிவங்களை அரசாங்கம் அடிக்கடி மாற்றி வருகிறது. முன்பு அதிக எடையில் இருந்த நாணயங்கள் தற்போது மிகக்குறைவான எடையில் வருவதால் சில்லறையை பிரித்து கட்டுவதில் சிரமம் நீடித்தது. ஒரே மாதிரியான நாணயங்களை பிரித்து ஆயிரம் ரூபாய்க்கு எவ்வளவு எடை என பிரித்து பின் நாணயங்களை எடைபோட்டு கட்டவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தற்போது நாணயங்களை எடைபோட நவீன தராசுகளை திருக்கோயில் நிர்வாகம் வங்கிகள் மூலமாக பெற்றுள்ளது. இரண்டு தராசுகளின் விலை சுமார் ஒரு இலட்சம் ரூபாய் ஆகும். இந்த தராசுகளில் சில்லறை காசுகளின் எடை தெரிவதோடு, சில்லறை காசுகள் எத்தனை என்ற எண்ணிக்கையும் தனியே காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட எடைக்கு எத்தனை நாணயங்கள் என்பது துல்லியமாக கணிக்கப்படுகிறது. இது நாணயங்களை ஆயிரக்கணக்கில் கட்டி கட்டுவதற்கு மிகவும் பயனாக உள்ளது என காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.