வழிதவறி மாணவர் விடுதிக்குள் புகுந்த மயில் மீட்பு
சிதம்பரம் அண்ணாமலைநகரில் மாணவர் விடுதிக்குள்ள வழிதவறி உள்ளே புகுந்த மயிலை வனத்துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் மாணவர் விடுதிக்குள்ள வழிதவறி உள்ளே புகுந்த மயிலை வனத்துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதிக்குள் காக்கைகள் துரத்தியதால் ஆண் மயில் ஒன்று புகுந்தது. இதுகுறித்து மாணவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்த வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சென்று விடுதிக்குள்ள புகுந்த மயிலை மீட்டு காப்புக்காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.