தற்போதைய செய்திகள்

விருதுநகரில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில்

எஸ். பாண்டியன்

தினக்கூலி பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி நாள்தோறும் கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில், நிறுத்திவைக்கப்பட்ட 14-மாதத்திற்கான அகவிலைப்படியை உடனே வழங்கவும், தினக்கூலி பணியாளர்களுக்கு ஒப்பந்தப்படி நாள்தோறும் கூலி வழங்கவும் மற்றும் ஏற்கனவே கடந்த ஜூலை-22, டிச-2 ஆகிய நாள்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினை தவிர மற்ற அனைத்து தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர்  திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT