தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற வேலை நிறுத்தப் போராட்டம்

விருதுநகர் மாவட்ட தலைநகரில் அரசு உத்தரவிட்டப்படி மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமித்து, கூடுதலாக அதிகாரம் வழங்க

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரையில் அட்வகேட் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்து செவ்வாய்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  

விருதுநகர் மாவட்ட தலைநகரில் அரசு உத்தரவிட்டப்படி மகளிர் நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு நீதிபதியை நியமித்து, கூடுதலாக அதிகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தைச் சேர்ந்த 110 பேரும், வழக்குரைஞர் சங்கத்தினர் 60 பேரும் என இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நீதிமன்றங்களில் வாதி, பிரதிவாதி சாட்சியங்கள் விசாரணை செய்ய முடியாமலும், சிறைச்சாலையில் இருக்கும் விசாரணை கைதிகளை போலீஸார் அழைத்து வரமுடியாத நிலையில் உள்ளேயே இருக்கும் நிலைமை உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்புராம் தெரிவித்தார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சுபம் பண்டிர் சதம்: முதல் நாளில் ஜம்மு காஷ்மீர் 284 ரன்கள் குவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

SCROLL FOR NEXT