தாமிரவருணி ஆற்றில் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணிகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணிகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்தது.
பாபநாசம் சேர்வலாறு அணைகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில் அணைகளுக்கு வந்து கொண்டிருந்த சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் இன்று காலை தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.