யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு கிளம்பிய பழனிக்கோயில் யானை கஸ்தூரி
தமிழக அரசு கோயில் யானைகளுக்கும், மடங்களில் உள்ள யானைகளுக்கும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றுப்படுகையில் உள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாமை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றங்கரை தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு பழனிக்கோயில் யானை கஸ்தூரி கிளம்பி சென்றது.
தமிழக அரசு கோயில் யானைகளுக்கும், மடங்களில் உள்ள யானைகளுக்கும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றுப்படுகையில் உள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாமை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் தமிழகம் மட்டுமன்றி புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் இருந்து கோயில்யானைகள், மடங்களின் யானைகள் பங்கேற்க உள்ளது. இந்த யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் டிசம்பர் 11 முதல் 48 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
இதற்காக பழனிக்கோயில் யானை கஸ்தூரி புதன்கிழமை லாரி மூலமாக முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது. இதுவரை சுமார் 11 முகாமிகளில் பங்கேற்ற பழனிக்கோயில் யானை கஸ்தூரி பராமரிப்புக்காகவும், அதன் செயல்பாடுகளுக்காகவும் பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளது. கடந்த முகாம்களில் அடம்பிடிக்கும் யானைகளை அடக்கும் கும்கியாகவும் செயல்பட்டது. தற்போது 48 வயதாகும் கஸ்தூரி யானையின் எடை 4,985 கிலோ ஆகும். பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல்படை முகாமில் உள்ள மேடையில் ஏற்றப்பட்ட யானை அருகே நிறுத்தப்பட்ட லாரிக்கு இலகுவாக கொண்டு செல்லப்பட்டது.
லாரியின் பக்கவாட்டு பகுதியில் வைக்கோல் போர்கள் மெத்தை போல அமைக்கப்பட்டிருந்தது. லாரியில் யானைக்கு வேண்டிய மருந்துகள், உணவுகள், தண்ணீர் ஆகியனவும் ஏற்றப்பட்டது. லாரியில் கஸ்தூரி ஏறிய பின்பு லாரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி ஆகியோர் பச்சைக் கொடியசைக்க லாரி புறப்பட்டு சென்றது. வழிநெடுக ஏராளமானோர் நின்று யானைக்கு கையசைத்து வழியனுப்பினர். பழனி கால்நடை மருத்துவர் சுரேஷ் உடன் செல்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், யானை கஸ்தூரிக்கு முகாமிற்கு வரும் பல்வேறு யானைகளின் உடல்நிலை கருத்தில் கொண்டு பல்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் வயிற்றில் குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. லாரியில் செல்லும் பொருட்டு கடந்த மூன்று நாட்களாக பயிற்சி பெற்றுள்ளது. அதற்கான அனைத்து தகுதிகளுடன் சிறப்பான தகுதியுள்ளதாக சான்றும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் டிஎஸ்பி., சண்முகசுந்தரம், உதவி ஆணையர் மேனகா, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், பழனி பெரியசாமி, நகராட்சி கவுன்சிலர்கள், திருக்கோயில் முன்னாள் மேலாளர் ரவி, கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.