பழனியருகே ஆற்றில் காலாவதியான அரசு மாத்திரைகள்
பழனியில் இருந்து பழைய தாராபுரம் செல்லும் சாலையில் மானூர் ஆற்றுப்பாலம் உள்ளது. சண்முகநதி இந்த பாலத்தின் வழியாக செல்கிறது. இந்த ஆற்றில் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான அரசு மாத்திரைகள் இருந்ததை அப்பகுதியில் நீராட வந்தவர்கள் பார்த்துள்ளனர். பல்வேறு வகையான இந்த
பழனியருகே மானூர் ஆற்றில் நூற்றுக்கணக்கான காலாவதியான அரசு மாத்திரைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் இருந்து பழைய தாராபுரம் செல்லும் சாலையில் மானூர் ஆற்றுப்பாலம் உள்ளது. சண்முகநதி இந்த பாலத்தின் வழியாக செல்கிறது. இந்த ஆற்றில் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான அரசு மாத்திரைகள் இருந்ததை அப்பகுதியில் நீராட வந்தவர்கள் பார்த்துள்ளனர். பல்வேறு வகையான இந்த மாத்திரைகள் சென்ற இரு மாதங்களுக்கு முன் காலாவதியான அரசு மாத்திரைகள் ஆகும். இதைத் தொடர்ந்து ஏராளமானோர் அங்கு வந்த பார்த்த போது ஆற்றின் கரையிலும் மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் ஏராளமான பச்சிளம் குழந்தைகள் இறப்புக்கு அவர்களது தாயார் போதிய அளவு சத்து இல்லாமல் இருந்தது தெரியவந்தது. பல பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கிராம சுகாதார நிலையங்களிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சரிவர அரசின் மருந்துகள் கிடைப்பதில்லை என்ற புகார் நிலவி வருகிறது.
அதுபோல கிராமத்தில் பெண்களுக்கு வழங்க அரசால் வழங்கப்பட்ட மருந்துகளை சரிவர வினியோகம் செய்யாமல் காலாவதியான பின்பு யாரும் வீசி எறிந்திருக்கலாம் என்று பலரும் தெரிவித்தனர்.