முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சம்: கலால் உதவி ஆணையர் உள்பட 2 பேர் கைது

அருப்புக்கோட்டைச் சுற்றிய டாஸ்மாக் கடைகளில் ரு5 ரூ.10  என பாட்டில்களுக்கு கூடுதலாக விலை வைத்து விற்பதாக கூறப்படுகிறது.

Updated On : 12 டிசம்பர், 2014 at 4:00 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:08 PM

அருப்புக்கோட்டைச் சுற்றிய டாஸ்மாக் கடைகளில் ரு5 ரூ.10  என பாட்டில்களுக்கு கூடுதலாக விலை வைத்து விற்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்துவிசாரணை நடத்திய கலால் துறை உதவி ஆணையர் பழனியாண்டி(56), டாஸ்கடை கடை ஊழியர் ஒருவரிடம்,  உங்கள் மீதான புகார்களை கண்டுகொள்ளமால் இருக்க வேண்டுமென்றால் எனக்கு மொத்தம் உள்ள 34 கடைகளில் தலா ரூ.1000 ஆயிரம் வசூலித்து தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் 19 கடைகளில் தலா ரூ. 1000 என 19000 ஆயிரம் வசூலித்த தந்த டாஸ்மாக் கடை ஊழியர், மேற்கொண்டு வசூலித்து தர விரும்பாமல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து ரசாயணம் தடவிய நோட்டுகளை அவரிடம் போலீஸார் கொடுத்து அனுப்பினர். அவர், கலால் துறை உதவி ஆணையர் பழனியாண்டி(56), மற்றும் பதிவறை எழுத்தர் சீனவாசனிடமும்(46) கொடுத்தார்.. அப்போது இருவரையும் போலீஸார் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.