முகப்பு
தற்போதைய செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர்

தற்போதைய செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:38 AM
பகிர்:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்கள்.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் சொத்து சேர்த்தகாக, லஞ்ச ஒழிப்பு போலீஸார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 நீதிமன்றம் இந்த வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களே விசாரிக்க உத்தரவிட்டது. இதன்படி இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 28.11.14-ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். மீண்டும் 12.12.14-ம் தேதிக்கு வாயிதா போடப்பட்டது. இதன்படி தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தங்களது குடும்பத்தினர் ஆஜராகாததற்கு ஒரு மனுவும், வழக்கின் ஆவணங்கள் கேட்டு ஒரு மனுவும் இவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், வழக்கு விசாரணையை 2015 ஜனவர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →