பாபநாசம், சேர்வலாறு அணைகளில் 4,000 கன அடி திறப்பு
மேற்குத் தொடர்ச்சி நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரிநீர் 4,000 கனஅடி சனிக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து உபரிநீர் 4,000 கனஅடி சனிக்கிழமை திறந்து விடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 23, பாபநாசம் கீழ் அணை 10, சேர்வலாறு அணை 12, மணிமுத்தாறு அணை 6.2, கடனாநதி அணை 3, ராமநதி அணை 10, கருப்பாநதி அணை 21, குண்டாறு அணை 2, அடவிநயினார் அணை 15, நம்பியாறு அணை 15, கொடுமுடியாறு அணை 5, கன்னடியன் அணைக்கட்டு 5.
திருநெல்வேலி 11.1, பாளையங்கோட்டை 11, மூலக்கரைப்பட்டி 7.2, களக்காடு 5.4, தென்காசி 18.2, ஆய்க்குடி 40.8, செங்கோட்டை 3, ஆலங்குளம் 8.6, ராதாபுரம் 24.2, நான்குனேரி 8, சேரன்மகாதேவி 2.6.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி 33.2, திருச்செந்தூர் 36, குலசேகரப்பட்டினம் 35, ஸ்ரீவைகுண்டம் 9.6, சாத்தான்குளம் 30.7, மணியாச்சி 1. சனிக்கிழமை பகலில் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது.
4 ஆயிரம் கனஅடி திறப்பு: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,452.84 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு 1,500 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. இதையடுத்து இவ்விரு அணைகளில் இருந்து உபரிநீர் 4,000 கனஅடி திறந்து விடப்பட்டு்ள்ளது. இதனால் 4 ஆவது நாளாக சனிக்கிழமை தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உள்ளது.
கடனாநதி அணைக்கு விநாடிக்கு 405 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 78.19 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 209 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 46 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 47 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணை 142.10 அடி, சேர்வலாறு அணை 145.86 அடி, மணிமுத்தாறு அணை 107.80 அடி, கடனாநதி அணை 84.40 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1.25 அடி உயர்ந்து 64.96 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 0.75 அடி உயர்ந்து 80.75 அடி, அடவிநயினார் அணை 94.50 அடி, குண்டாறு அணை 36.10 அடி, வடக்குப் பச்சையாறு அணை 42.75 அடி, நம்பியாறு அணை 22.96 அடி, கொடுமுடியாறு அணை 34.50 அடியாகவும் இருந்தது.
மணிமுத்தாறு அணையில் 100 கனஅடியும், கடனாநதி அணையில் 336 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், கருப்பாநதி அணையில் 25 கனஅடியும், அடவிநயினார் அணையில் 35 கனஅடியும், கொடுமுடியாறு அணையில் 100 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.