லாரியில் சிக்கி வாலிபர் பலி
பழனி அருகே கோதைமங்கலம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் பாலசுப்ரமணி(23). இவர் ஞாயிற்றுக்கிழமை பாலசமுத்திரம் பகுதியில் வேலை நிமித்தமாக மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு
பழனியருகே லாரியில் சிக்கி வாலிபர் பலியானார்.
பழனி அருகே கோதைமங்கலம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் பாலசுப்ரமணி(23). இவர் ஞாயிற்றுக்கிழமை பாலசமுத்திரம் பகுதியில் வேலை நிமித்தமாக மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு சிவகிரிப்பட்டி-சண்முகநதி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் உரசியதில் பாலசுப்ரமணி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விழுந்துள்ளார். அப்போது பின்னே வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதுகுறித்து திங்கள்கிழமை சின்னத்தம்பி கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர்குளத்தூர் கல்லுக்கடைத் தெருவை சேர்ந்த மருதன் மகன் இளையராஜா(29) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.