முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி நகராட்சி ஒப்பந்தகாரர்களுக்குள் அடிதடி

பழனி அடிவாரம் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் முனியப்பன் மகன் ராமசாமி.  இவர் நகராட்சி ஒப்பந்தகாரர் ஆவார்.  அதே போல பழனியை அடுத்த ஆயக்குடி டிகேஎன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:

பழனி நகராட்சி ஒப்பந்தகாரர்களுக்குள் ஏற்பட்ட அடிதடியில் ஒருவர் காயமடைந்தார். 

     பழனி அடிவாரம் இட்டேரி ரோட்டை சேர்ந்தவர் முனியப்பன் மகன் ராமசாமி.  இவர் நகராட்சி ஒப்பந்தகாரர் ஆவார்.  அதே போல பழனியை அடுத்த ஆயக்குடி டிகேஎன் புதூரை சேர்ந்தவர் கருப்பணன் மகன் சாமிதுரை(45) என்பவரும் நகராட்சி ஒப்பந்தகாரர் ஆவார். இவர்கள் இருவரும் பழனி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள நகராட்சி மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் நகராட்சியில் ஒப்பந்தப்பணிகள் எடுப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.  வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது.  அப்போது ராமசாமியும், அவரது மகன் குணசேகரனும் சாமிதுரையை அங்கிருந்த இரும்பு கம்பியால் தாக்கிய கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காலில் பலத்த காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சாமிதுரை வியாழக்கிழமை கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் ராமசாமி, குணசேகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.