முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் பல்கலை.யில் மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள் ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்களது அணியின் வருகை குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளிகள் ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்களது அணியின் வருகை குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் (அரசு, தனியார், மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ.) பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்கு கொள்ளும் அணிகளுக்கு இலவச உணவு, இருப்பிடம் வழங்கப்படும். போட்டிகள் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும்.

போட்டியில் வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு பரிசுத் தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி அணிகள் ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்களது வருகை குறித்து பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர்களின் கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேந்தர் க.ஸ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பதிவுக்கு: 96294-02895, 97882-25996, 99651-10173.

முழு கட்டுரையைப் படிக்க →