ரயில் மோதி மூதாட்டி சாவு
திருச்சி திருவெறும்பூர் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே சனிக்கிழமை ரயில் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகேயுள்ள மேலகுமரேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மனைவி பொன்னம்மாள்(65). இவர் சனிக்கிழமை காலை அந்த பகுதியிலுள்ள எழில்நகருக்கு செல்வதற்காக அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடந்தார். அப்போது திருச்சியிலிருந்து தஞ்சை சென்ற பயணிகள் ரயில் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்: திருச்சி ரயில்வே ஜங்ஷன் 5-வது நடைமேடையிலுள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற ரயில்வே போலீஸார் அங்கு சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.