ஸ்ரீவில்லிபுத்தூரில் வி.ஏ.ஓ. வை அரிவாள் முனையில் மிரட்டி 22 பவுன் நகை கொள்ளை வழக்கு: ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை அரிவாள் முனையில் மிரட்டி, அவர் மனைவி அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 22
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் வி.ஏ.ஓ. வை அரிவாள் முனையில் மிரட்டி 22 பவுன் நகை கொள்ளை வழக்கு: ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை அரிவாள் முனையில் மிரட்டி, அவர் மனைவி அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 22
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலரை அரிவாள் முனையில் மிரட்டி, அவர் மனைவி அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட 22 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஒருவரை தனிப்படை போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர். மேலும் 3 பேர் ராமநாதபுரத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் இம் மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் மடவார்வளகத்தை அடுத்து வன்னியம்பட்டி விலக்குக்கு முன்னால் குடியிருந்து வருபவர் க.பழனிச்சாமி. இவர் மம்சாபுரம்-வாழைக்குளம் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவரது மனைவி தனுஷ்கோடி. இவர்களின் இரு மகன்களும் வெளியூரில் உள்ளார்கள்.6.9.14-ம் தேதி இரவு வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு, உள் அறையில் ஏ.சி. போட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அதிகாலை 2 மணி அளவில் பழனிச்சாமியின் காலை யாரோ கட்டுவது போல இருந்துள்ளது. இதனையடுத்து அவர் எழுந்திருக்க முயற்சித்துள்ளார். கண் விழித்துப் பார்த்த போது 5 இளைஞர்கள் முகமுடி அணிந்து, ஒருவன் கையில் அரிவாளுடனும், ஏனைய 4 பேரும் கத்தியுடனும் படுக்கை அறையில் நின்று கொண்டிருந்துள்ளார்கள். அரிவாளுடன் வந்த நபர் பழனிச்சாமியை மிரட்ட, ஏனைய நால்வரும் அவரது மனைவியை மிரட்டியுள்ளனர். நிலைமையை புரிந்து கொண்ட பழனிச்சாமி பீரோ எல்லாம் திறந்துதான் உள்ளது எல்லாவற்றையும் எடுத்துக்கொள் என்று கூறியுள்ளார். தனுஷ்கோடி தான் அணிந்திருந்த தாலி செயின், வளையல்கள், மூக்குத்தி, கம்மல் உள்ளிட்டவற்றை கழற்றி கொடுத்துள்ளார். மேலும் இருந்த நகைகளும் சேர்த்து சுமார் 22 பவுன் நகைகளை கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள், டி.வி., மின் விசிறி, செல்போன்கள், தரை வழி போன், ரொக்கம் ரூ.5 ஆயிரம் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையர்கள் எடுத்துள்ளனர்.
மேலும் பழனிச்சாமி கொள்ளையன் கையில் இருந்த அரிவாளை பறிக்க முயன்றபோது, அவரது கையில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்போனில் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்வது போல பழனிச்சாமி பேசியுள்ளார். இதனையடுத்து வந்த கொள்ளையர்கள், தாங்கள் வந்த காரில் தப்பி ஓடிவிட்டனர்.கொள்ளையர்கள் வீட்டின் சுற்றுச் சுவரில் உள்ள கேட்டை ஏறி குதித்து உள்ளே நுழைந்து, மிகவும் பலமாக உள்ள கதவை கேஸ் வெல்டிங் மிஷின் கொண்டு உடைத்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பின்னர் தெரியவந்தது.
இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் மற்றும் வுிருதுநகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் இம் மாதம் 20-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஒரு கொலைச் சம்பவத்தில் மூன்று குற்றவாளிகளை போலீஸார் பிடித்தனர். இவர்கள் இக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் தங்கள் வசம் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
இந்நிலையில் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான தனிப்படை அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த விருதுநகர், போலீஸ்பாலம், ஆறுமுகம் மகன் வடிவேல் (24) என்பவரைக் கைது செய்தனர். இவரிடம் இருந்து இங்கு கொள்ளையடிக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டி பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் ஒரு குற்றவாளியை காரைக்குடியில் நடைபெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். இவரையும் போலீஸார் தங்களது வசம் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
கைது செய்யப்பட்ட வடிவேல், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிபதி கவிதா, இவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.