திருட்டு வி.சி.டி தயாரித்த திரையரங்கு ஆபரேட்டர் குண்டர் சட்டத்தில் கைது
புதுப்பட குறுந்தகடுகளை திருட்டுத் தனமாக தயாரித்தாக அருப்புக்கோட்டை தனியார் திரையரங்கத்தின் ஆபரேட்டாரை போலீஸார் வியாழக்கிழமை இரவு குண்டர் சட்டத்தில்
புதுப்பட குறுந்தகடுகளை திருட்டுத் தனமாக தயாரித்தாக அருப்புக்கோட்டை தனியார் திரையரங்கத்தின் ஆபரேட்டாரை போலீஸார் வியாழக்கிழமை இரவு குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(56). இவர் அருப்புக்கோட்டை தனியார் திரையரங்கத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அப்பகுதி தனியார் திரையரங்கில் திரையிடப்பட்ட பூஜை படத்தை கணிப்பொறியில் பதிவு செய்து குறுந்தகடுகள் தயாரித்து வருவதாக திருட்டு வி.சி.டி ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அதோடு, அவரிடம் இருந்த புதுப்பட குறுந்தகடுகளையும் பறிமுதல் செய்தனர்.
ஏற்கனவே இதுபோல் திரைக்கு வரும் புதிய படங்களை பதிவு செய்ததாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதனால் நாகராஜ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதையடுத்து, ஆட்சியர் டி.என்.ஹரிஹரனும் வழக்குகளை ஆய்வு செய்து உடனே கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் திரையங்கு ஆபரேட்டர் நாகராஜை போலீஸார் கைது செய்து மதுரை மத்தியச் சிறைச்சாலையில் அடைத்தனர்.
Advertisement