பழனி கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை துவக்கம்
பழனியில் கடந்த இரு தினங்களாக தொடர்விடுமுறை, அரையாண்டுத் தேர்வு விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோயில், வின்ச் நிலையம், ரோப்கார்
பழனி மலைக்கோயிலுக்கு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் முன்னதாகவே பாதயாத்திரை வரத்துவங்கியுள்ளனர்.
பழனியில் கடந்த இரு தினங்களாக தொடர்விடுமுறை, அரையாண்டுத் தேர்வு விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோயில், வின்ச் நிலையம், ரோப்கார் நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது. பழனிக்கோயிலுக்கு விரைவில் தைப்பூசம் வரவுள்ள நிலையில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் புத்தாண்டுக்கு மலைக்கோயிலுக்கு வருவது வழக்கம். அதன்படி தற்போதே ஏராளமான பக்தர்கள் மயில்காவடி எடுத்து பழனிக்கு வந்தவண்ணம் உள்ளனர். பழனி-தாராபுரம் சாலை, பழனி-உடுமலை சாலையில் பக்தர்கள் சாரை, சாரையாக பாதயாத்திரை வருவதை முன்னிட்டு ஏராளமான சாலையோர கடைகளும் முளைத்துள்ளன. ஆகவே, சாலையோர கடைகளில் பக்தர்கள் நலனை முன்னிட்டு சுகாதார நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகள் மூலம் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.