முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து இப் பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து இப் பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:46 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார். இதனையடுத்து இப் பகுதியில் மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தலைமையில் தீவிர ஒட்டு மொத்த துப்புரவுப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் பேரூராட்சி, 18-வது வார்டு, மீனாட்சி தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜெயக்குமார் (24). இவரது மனைவி முருகேஸ்வரி (21). இவர்களின் மூத்த மகன் செல்வகணேஷ் (படம்) (2). மேலும் இவர்களுக்கு விமல்ராஜ் என்று 6 மாதத்தில் ஒரு குழந்தை உண்டு.

கடந்த 1 மாதத்திற்கு முன்னர் செல்வகணேஷ்க்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் டாக்டர் காளிராஜ் என்பவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் செல்வகணேஷைக் காட்டியுள்ளார்கள். அவர் மாத்திரை மருந்துகள் கொடுத்துள்ளார். 10 நாட்களுக்கு மேலாகியும் காய்ச்சல் கேட்காததால் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்வகணேஷைக் காட்டியுள்ளார்கள். அங்கு ரத்ததைப் பரிசோதித்த டாக்டர், செல்வகணேஷ்க்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாய் கூறியுள்ளார். மேலும் மதுரை அல்லது திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளார். இதன் பேரில் செல்வகணேஷை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வகணேஷ், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இது குறித்து மம்சாபுரம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெயர் அளவில்தான் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள டாக்டர் மற்றும் பணியாளர்கள் எந்தவித சுகாதார முன்னேற்பாட்டுப் பணியையும் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்வதில்லை. நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அரசு ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள், நோய் வந்த பின்னர் வந்து பெயருக்கு சொட்டு மருந்துகள் வழங்குகிறார்கள் என்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மதுரை மண்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.குணசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் ஒட்டு மொத்த துப்புரவுப் பணியை மேற்கொண்டார். மேலும் கழிவு நீர் பாதைகளை சுத்தம் செய்தல், கொசு மருந்து தெளித்தல், அபேட் மருந்து குடிநீர் தொட்டிகளில் ஊற்றுதல், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் குணசேகரன் கூறுகையில், போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இப் பணிகள் அனைத்து வார்டுகளிலும் முறைப்படி தொடர்ச்சியாக நடைபெறும். இப் பகுதி மக்கள் பொதுக் கழிப்பறைகளில் தண்ணீர் சரிவர வருவதில்லை என்று புகார் கூறினர். இது குறித்து செயல் அலுவலரிடம் கூறி உடனடியாக சீர் செய்து தர கூறியுள்ளேன் என்றார். அப்போது உடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மு.சித்திரைக்கனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →